ஓ.பன்னீர் செல்வம் VS சசிகலா.. ஒ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது!

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக இன்று உயர்ந்தது.

சசிகலா தரப்பில் எம்.எல்.ஏக்கள் அதிகம் உள்ளனர். அதேசமயம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எம்.பிக்கள் அதிகமாகிக் கொண்டுள்ளனர். இருவரிடமும் உள்ள பலத்தின் லேட்டஸ்ட் நிலவரம் இது:

எம்.எல்.ஏக்கள் பலம்

சசிகலா - 126
ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர் உள்பட மொத்தம் 9 பேர்.

OPS vs Sasikala: Status report

எம்.எல்.ஏக்கள் விவரம்

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் (போடிநாயக்கனூர்)
மாஃபா பாண்டியராஜன் (ஆவடி)
ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்)
சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்)
மாணிக்கம் (சோழவந்தான்)
மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை)
மனோகரன் (வாசுதேவநல்லூர்)
சரவணன் (மதுரை தெற்கு)
செம்மலை (மேட்டூர்)

எம்.பிக்கள் பலம்

ஓ.பன்னீர் செல்வம் - 12 (10 லோக்சபா எம்.பிக்கள் + 2 ராஜ்யசபா எம்.பிக்கள்) மற்றும் சசிகலா புஷ்பா.

ஆதரவு எம்.பிக்கள் விவரம்:

லோக்சபா எம்.பிக்கள்

தூத்துக்குடி - ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
நாமக்கல் - பி.ஆர். சுந்தரம்
வேலூர் - பி.செங்குட்டுவன்
பெரம்பலூர் - மருதராஜா
கிருஷ்ணகிரி - அசோக்குமார்
திருப்பூர் - சத்யபாமா
திருவண்ணாமலை - வனரோஜா
விழுப்புரம் - எஸ்.ராஜேந்திரன்
தேனி - பார்த்திபன்
மதுரை - கோபாலகிருஷ்ணன்

ராஜ்யசபா எம்.பிக்கள்

டாக்டர் மைத்ரேயன்
ஆர்.லட்சுமணன்

English summary
Here is the list of supporting MLAs and MPs for both CM OPS and Sasikala and the latest list.
Please Wait while comments are loading...