For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 126 கொலைகள், 64 வழிப்பறிகள், 333 திருட்டுகள்: 2014ல் குற்றங்கள் குறைவாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் நடப்பாண்டில் இதுவரை 126 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவாகவே உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் 405 வழக்குகள் துப்பு துலக்கப்பட்டு, 504 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 2,800 சவரன் தங்க நகைகள், 294 வைரக்கற்கள், 37 கிலோ வெள்ளி, ரூ.55 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட ரூ.9 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நடந்த குற்றங்களை விரைந்து கண்டுபிடிக்கவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும், மாநகர கமிஷனர் ஜார்ஜ் நேரடி மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்ய செக்டர் பீட் முறையினை அறிமுகப்படுத்தி குற்றம் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றங்களை துரிதமாக புலன் விசாரணை செய்ய கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ்குமார் மற்றும் கருணாசாகர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் மண்டல இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், தினகர், சண்முகவேல் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு குழுக்கள் அமைத்து புலன் விசாரணையை துரிதப்படுத்தப்பட்டது. சென்னை மாநகர கமிஷனர் ஒவ்வொரு வாரமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

மண்டல இணை கமிஷனர்கள் தலைமையில் செயல்படும் புலன் விசாரணை தனிப்படையினர், வடக்கு மண்டலத்தில் 38 வழக்குகளையும், மேற்கு மண்டலத்தில் 98 வழக்குகளையும், கிழக்கு மண்டலத்தில் 163 வழக்குகளையும், தெற்கு மண்டலத்தில் 105 வழக்குகளையும் துப்பு துலக்கினார்கள். இதில் மொத்தம் 504 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 504 குற்றவாளிகளிடமிருந்து 2800 சவரன் தங்க நகைகளும், 294 வைரக்கற்களும், 37 கிலோ வெள்ளிப் பொருட்களும், ரூபாய் 55 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர செல்போன் மற்றும் 203 லேப்டாப், திருடு போன 82 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துப்புதுலக்கப்பட்ட 405 வழக்குகளில் மொத்தம் ரூபாய் 9 கோடியே 50 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

2014ல் ஆண்டில் நடந்துள்ள கொலைகள்

சென்னை மாநகரில் குற்ற வழக்குகளை பொருத்தவரையில் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குற்றம் குறைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில் 31 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 74 வழிப்பறி வழக்குகளும், இந்த ஆண்டு 64 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது 14 சதவீதம் கடந்த ஆண்டை விட குறைவு. அதேபோல சுவற்றில் ஓட்டை போட்டு திருடும் (கன்னக்களவு) வழக்குகள் 2013ல் 423 பதிவாகின. இந்த ஆண்டு 333 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது சென்ற ஆண்டை ஒப்பிடும் போது 21 சதவீதம் குறைவு. அதேபோல் சங்கிலி பறிப்பு வழக்குகளும் 23 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு 506 வழக்குகளும், இந்த ஆண்டு 389 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Over 400 cases cracked in last four months: Police

சென்னை நகரில் கடந்த ஆண்டில் மட்டும் 163 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் 2014ல் இதுவரை 126 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவாகவே உள்ளது.

சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்கள் எவ்வித தாமதமின்றி பதிவு செய்யப்பட்டு அவற்றின் மீது உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் முக்கியமான குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக கொலை குற்ற வழக்குகள் கட்டுபாட்டில் உள்ளது.

இந்த ஆண்டு சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் 95 ஆயிரத்து 501 மனுக்கள் பதிவாகியுள்ளன. புலன் விசாரணை செய்து கண்டுபிடிக்கப்பட்ட 405 வழக்கில் 73 கன்னக்களவு வழக்குகளும், 152 சங்கிலி பறிப்பு வழக்குகளும், 15 வழிப்பறி வழக்குகளும், 91 இதர திருட்டு வழக்குகளும் அடங்கும். புலன் விசாரணை செய்து முடிக்கப்பட்ட வழக்குகளில் சென்னை மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைசாமி சுரங்கபாதை அருகில் மகேஷ் என்பவரிடமிருந்து அவரது கவனத்தை திசைத்திருப்பி திருடப்பட்ட 529 சரவரன் தங்க நகைகள் உடனடியாக கண்டுபிடித்து ஏசுதாஸ் என்பவனை கைது செய்து 529 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

அதேபோல் விஷால் என்பவர் என்.எஸ்.சி போஸ் ரோட்டில் இருந்து சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொண்ட கைப்பையினை காரில் எடுத்துக்கொண்டு மாம்பலம் பகுதியில் வரும்போது திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த குற்றவாளிகள் ரூபாய் நோட்டுகளை அவரது கார் அருகில் சிதறவிட்டு விஷாலின் கவனத்தை திசைத்திருப்பி கொள்ளையடித்துச் சென்றனர். இக்கொள்ளை சம்பவம் அருகாமையிலிருந்த சிசிடிவி-யில் பதிவானதை தொடர்ந்து தனிப்படையினர் துரிதமாக புலன் விசாரணை செய்து திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 குற்றவாளிகளை கைது செய்து 406 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.

சைதாப்பேட்டையில் கணேசன் என்பவர் வைரக்கல் பட்டைத் தீட்டும் பணியை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வேலையாட்களை கொண்டு செய்து கொண்டிருந்தபோது பட்டை தீட்ட வழங்கப்பட்ட 296 வைரக்கற்கள் திருட்டு போயின. அடையாறு மாவட்ட தனிப்படையினர் துரிதமாக புலன் விசாரணை செய்து மேற்குவங்க குற்றவாளிகள் 6 பேரை கைது செய்து ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள வைரக்கற்களை மீட்டனர்.

சங்கிலி பறிப்புக்கு தனிப்படை

சென்னை மாநகரில் நடைபெற்ற சங்கலிப்பறிப்பு வழக்குகளை புலன்விசாரணை செய்ய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சங்கிலி பறிப்பு வழக்குகளை தொடர்ந்து கண்காணித்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சங்கிலிபறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் புலன் விசாரணையில் தொடர்ந்து கண்காணித்தனர்.

தனிப்படையினர் மத்தியபிரதேச மாநிலம், தாவன்கரே மற்றும் போபால் ஆகிய இடங்களுக்கு சென்று வடஇந்திய குற்றவாளிகள் மூர்த்தஜாஅலி, கோபால், சர்தாஜி அலி, அர்சன் அலி மற்றும் சுனில் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டர் சைக்கிள், லேப்டாப் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் இதுவரை சென்னை நகரில் 1748 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 1601 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை ஆதாய கொலைகள், வழிப்பறி, கன்னக்களவு, சங்கிலிப்பறிப்பு மற்றும் வாகனத் திருட்டுகளில் சம்பந்தப்பட்ட 681பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், இதுதவிர சட்டம் ஒழுங்கு வழக்குகளில் 1067 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறமையாக செயல்பட்டு குற்ற வழக்குகளை வெளிமாநிலங்களுக்குச் சென்று துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டு போன பொருட்களை மீட்ட தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.

English summary
City Police today said it had cracked over 400 cases of property offences in the last four months, recovering stolen articles including gold worth Rs 9.50 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X