For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெ. விடுதலையாக 1008 விளக்கு பூஜை – உபயம்: பா.வளர்மதி!

Google Oneindia Tamil News

P.Valarmathi holds pooja in Ayyapan kovil for Jaya
சென்னை: அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா விரைவில் வழக்கிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று வேண்டி அமைச்சர் பா.வளர்மதி சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 1008 விளக்கு பூஜை வழிபாடு செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். வழக்கிலிருந்தும் விடுதலை பெறுவேன் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா நிரபராதியாக வெளியே வர அ.தி.மு.கவினர் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி நேற்று மாலையில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

குருவாயூரப்பன், அய்யப்பன் சன்னதிகளில் சுற்று விளக்குகளும் கர்ப்ப கிரகத்தில் அலங்கார தீபங்களும் ஏற்றபட்டன. மேலும் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மஞ்சமாதா, நவகிரகங்கள், கருடாள்வார் சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.

தீப ஸ்தம்பங்களில் தலா 108 தீபங்கள் ஏற்றப்பட்டன. மொத்தம் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஜெயலலிதா ஜெயிலில் இருந்போது இதே கோவிலில் புஷ்பாபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினார்கள்.

English summary
Tamil Nadu minister P.Valarmathi was organized a special pooja in Mahalingapuram ayyappan temple for jayalalitha’s case release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X