பாக்.,ஒரு பயங்கரவாத நாடு - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

சென்னை: பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை கடந்து இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

 Pakistan is a terrorist state - Mukhtar Abbas Naqvi

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. தீவிரவாதத்தை அழிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

தலாக் முறை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தாம் கருத்து கூற இயலாது. தனிபட்ட மனிதர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். வக்பு வாரியத்தின் கீழ் உள்ள நிலங்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Pakistan is a terrorist state, says Union Minister Mukhtar Abbas Naqvi
Please Wait while comments are loading...

Videos