For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் இன்று பதவியேற்பு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பள்ளி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழக அமைச்சரவை நேற்று (திங்கட்கிழமை) திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பால்வளத்துறை இலாகா கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Pandiarajan sworn in as Minister of Education School tomorrow

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின் ஊரக தொழில் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.

புதிய அமைச்சரவை பட்டியல் விவரம்:

1. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை

2. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்

3. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்

4. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை

5. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை

6. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

7. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்

8. ஜெயக்குமார் - மீன் வளத்துறை,

9. சி.வி. சண்முகம் - சட்டத் துறை

10. கே.பி.அன்பழகன் - உயர் கல்வித் துறை

11. வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவு

12. கே.வி. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை

13. ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை

14. எம்.சி.சம்பத் - தொழில்துறை

15. ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை

16. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

17. விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

18. மாஃபா கே. பாண்டியராஜன் - பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை

19. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை

20. ராஜேந்திர பாலாஜி - பால்வளத்துறை

21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை

22. பெஞ்சமின் - ஊரகத் தொழில் துறை

23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை

24. உதயகுமார் - வருவாய் துறை

25. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்

26. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

27. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்

28. துரைக்கண்ணு - வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

29. கே.சி. வீரமணி - வணிக வரித்துறை

English summary
Aavadi MLA Ma Foi Pandiarajan sworn in as Minister of school and Education tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X