For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுலாத் தலம் அல்ல மெட்ரோ நிலையங்கள்.. 20 நிமிடத்திற்கு மேல் சுற்றினால் அபராதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களையும், ரயில்களையும் சுற்றிப் பார்க்க வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதாக இருந்தாலும் கூட மெட்ரோ ரயில் நிலையங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த சில அறிவுறுத்தல்களை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Passengers will be fined for long staying in Metro stations

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

  • ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து அங்கு போவதற்கும், அங்கிருந்து இங்கு வருவதற்கும் தனித் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும்.
  • ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டு மறு முனையில் இறங்கி பின்னர் அங்கிருந்து இந்த முனைக்கு அதே டிக்கெட்டில் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்.
  • டிக்கெட் எடுத்து விட்டால் அதிகபட்சம் 20 நிமிடம்தான் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்.
  • ஒரு ரயிலைத் தவற விட்டால் அடுத்த ரயிலைப் பிடித்துப் போய் விட வேண்டும்.
  • ஒரு மணி நேரம் வரை பார்ப்பார்கள். அதற்கு மேலும் யாரேனும் ரயில் நிலையத்திலியே சுற்றிக் கொண்டிருந்தால் போலீஸ் மூலம் வெளியேற்றப்படுவார்கள்.
  • ரயில் நிலையம் முழுவதும் முழுமையாக கண்காணிப்புக் கேமராவின் வளையத்தில் உள்ளது. எனவே எந்த பயணியும் எங்கும் போய் ஒளிந்து கொண்டு டேக்கா கொடுக்க முடியாது.
  • 20 நிமிடத்திற்கு மேல் நின்றால் ரூ. 10 அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சம் ரூ. 100 வரை அபராதம் விதிக்கப்படும்.
English summary
Passengers will be fined for long staying in Metro stations, officials of Chennai Metro have warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X