For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செல்கிறதா அரசு? அதிரவைக்கும் தகவல்கள்!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கெடுபிடிகள் விதிக்கப்படுவது நியாமா சட்டத்திற்கு எதிரானதா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: ரேசன் கடைகளில் பொருட்கள் ஏன் வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் தேடுபவர்கள் நம்மில் மிகக்குறைவே. ஆனால் இந்த கேள்விக்கான பதிலில் பல உண்மைகள் புதைந்திருக்கிறது.

அத்யாவசியப்பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி, சந்தை விலையை விட குறைவாக கிடைக்கச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் ரேசன் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மத்திய அரசு உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்கள் இந்த அடிப்படைக்கு எதிராக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கான உணவை உத்தரவாதப்படுத்துவது அரசின் தலையாய கடமை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரேசன் பொருட்கள் கட் அரசியலமைப்புக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 குழப்பத்திற்கு யார் காரணம்?

குழப்பத்திற்கு யார் காரணம்?

2014-ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலின்போது, தேர்தல் அறிக்கை வெளியிட்ட பி.ஜே.பி., அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருக்கிறது. பொது விநியோகத்திட்டம் என்பது தேசிய பாதுகாப்புக்கு இணையானது என்றும் சொல்லி இருக்கிறார்கள். பொது விநியோகத்திட்டம் எந்த மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப் படுகிறதோ அந்த மாநிலத்தின் நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படும் என்றும் பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

 அளவு குறைப்பு

அளவு குறைப்பு

ஆனால், இப்போது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தமிழகத்தில் தற்சமயம் ரேஷன் பொருட்கள் பெற்று வருபவர்களில் 50.5 சதவிகிதம் பேர் மட்டும்தான் இனிமேல் பொருட்கள் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. இப்போதே அரிசி, கோதுமை. மண்ணெண்ணைய், சர்க்கரை எல்லாவற்றிலும் அளவைக் குறைத்து விநியோகிக்கிறார்கள்.

 தள்ளாடும் தமிழகம்

தள்ளாடும் தமிழகம்

இப்போது அந்தியோதையா அன்னயோஜனாவின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் சர்க்கரை கிலோவுக்கு 18.50 ரூபாய் என்று மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த வரம்பில் வராதவர்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுப்பதில்லை. ஏற்கெனவே நிதி இல்லாமல் தள்ளாடி வரும் தமிழக அரசால் நீண்ட நாட்களுக்கு எல்லோருக்கும் மானிய விலையில் சர்க்கரை கொடுக்க முடியாது.

 மண்ணெண்ணெய் குறைப்பு?

மண்ணெண்ணெய் குறைப்பு?

மண்ணெண்ணெயைப் பொறுத்தவரை தமிழகத்தில் முன்பு 59,750 கிலோ லிட்டர் கொடுத்தனர். இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 17,940 கிலோ லிட்டர் ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்கள் கழித்து இதையும் இல்லை என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

English summary
Is BJP government functioning against of the promise given in their election manifesto with that of PDS schemes across India by cutting subsidies and implementing FSB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X