For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேண்டாம் வேண்டாம் அவசரச் சட்டம் வேண்டாம்.. எழுச்சி குறையாத மக்கள் போராட்டம்.. ஷாக்கில் அரசுகள்!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று மாணவிகள், மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உறுதியாக உள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி போராட்டத்தை கைவி

Google Oneindia Tamil News

சென்னை: அவசரச் சட்டத்திற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் ஓகே சொல்லிவிட்டு போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று நம்பிய தமிழக அரசு திக்குமுக்காடிப் போயுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள் தொடர்ந்து போராடி வருவதைக் கண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஒரு சிறு பொறி போல சென்னையில் ஜனவரி 8ம் தேதி மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் கூடி பெரிய பேரணி ஒன்றை நடத்தினார்கள். அது இன்று அணைக்க முடியாத தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

பொங்கல் திருவிழாவின் போது அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் இரவு பகலாக நடந்து வந்ததையடுத்து, சென்னையிலும் இரவு பகலாக இளைஞர்கள், மாணவ, மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனை எதிர் பார்க்காத தமிழக அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தொடரும்..

தொடரும்..

அவசரச் சட்டத்தை எல்லாம் காட்டி மாணவர்களை ஏமாற்றி விட முடியாது என்று கூறி நிரந்தர சட்டம் வேண்டி போராட்டக்காரர்கள் இடத்தை விட்டு அகலாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை, அலங்காநல்லூர், திண்டுக்கல், கரூர், வேதாரண்யம், நாகை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகம் முழுவதும் பல மடங்கு வேகத்துடன் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்த இடத்திலும் நடந்து விடக் கூடாது என்பதில் போராட்டக்கார்கள் கண்ணும் கருத்துமாக இருந்து தடுத்து வருகின்றனர். அலங்காநல்லூரில் அரசு வாகனங்கள் எதுவும் வந்து விடக் கூடாது என்று இன்று காலை முதல் சாலையில் மக்கள் திரண்டு அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.

உறுதி குலையாது..

உறுதி குலையாது..

பெண்கள், மாணவிகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சற்றும் சளைக்காமல் முன்னை விட அதிக உறுதியுடன் தற்போது போராடி வருகின்றனர்.
அவரசச் சட்டம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்று போராட்டக்காரர்கள் உறுதியாகக் கூறி அதனை நிராகரித்துள்ளனர். இதனால் இன்று அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியவில்லை. நமக்கு நல்ல பெயர் கிட்டும் என்று நினைத்த முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்.

அதிகரிக்கும் பெண்கள்

அதிகரிக்கும் பெண்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பெண்களின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று போராட்டத்தில் மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லாமல் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் இரவெல்லாம் கலந்து கொள்ள முடியாத குடும்பத் தலைவிகள் போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு சமைத்து, போராட்டக்களத்திற்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வருகிறார்கள். இப்படி பெண்களின் ஆதரவையும் அதிக அளவில் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கண்ட மத்திய, மாநில அரசுகள் இதனை எப்படி அடக்குவது என்பதையே யோசித்து வருகிறது. மாறாக நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

அதிர்ச்சியில் அரசுகள்

அதிர்ச்சியில் அரசுகள்

தமிழக மக்களின் இந்த எழுச்சியான கட்டுக்கோப்பான போராட்டத்தைக் கண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. பீட்டாவிற்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காகவும் மோடி அரசு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதனை விரட்டியடிக்க இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் இணைந்திருப்பது அச்சத்தோடு பார்த்து வருகிறது மத்திய அரசு. தமிழக மக்களை ஏமாற்று வேலைகள் செய்து கவிழ்த்துவிட முடியாது என்று இப்போது மத்திய அரசுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

English summary
Jallikattu supporters continue their strong protest for permanent solution in Jallikattu issue in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X