For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு நெஞ்சுவலி.. அப்பல்லோவில் அனுமதி!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதை கேள்விபட்ட பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி, சென்னை கிரீம் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Perambur MLA Vetrivel Hospitalisation

உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதைக் கேள்விப்பட்ட வட சென்னை அதிமுக செயலாளரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு இதயத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாலை காலை பைபாஸ் சர்ஜரி ஆபரேஷன் நடைபெற உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா மீண்டும் எம்.எல்.ஏ. ஆவதற்காக தனது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெற்றிவேல், பின்னர் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK perambur mla vetrivel heart attack, after learning about chief minister jayalalithaa's cardiac arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X