For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.. கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மனு

சிறையில் 26 ஆண்டுகளாக இருக்கும் பேரறிவாளனுக்கு உடல் நலமில்லாத பெற்றோரை பார்க்க பரோல் வழங்க வேண்டும் என்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் கொண்டு வர மனு அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். அவருக்கு பரோல் வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர சபரநாயகர் தனபாலிடம் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, மற்றும் கருணாஸ் எம்எல்ஏ, தனியரசு எம்எல்ஏ ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

Perarivalaln’s parole, resolution in assembly

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர்களது பெற்றோர் முதுமை மற்றும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்கக் கூட பரோல் கொடுக்க மறுத்து வருகிறது சிறைத்துறை. இந்நிலையில் சட்டசபையில் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரப்பட்டுள்ளது.

நேற்று தமிமுன் அன்சாரி சட்டசபையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் சண்முகம், 7 பேரின் விடுதலை என்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MLAs Thamimun Ansari, Karunas, Thaniyarasu have given petition to speaker to discuss Perarivalan’s Parole in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X