For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘தேச விரோத’ அமைப்பு என்பதா? மு.க.ஸ்டாலினுக்கு பீட்டா பதிலடி !

விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி என பீட்டா கூறியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு பீட்டா இந்தியா பதில் அளித்துள்ளது.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நமது கலாசாரத்துக்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

peta slams on stalin for calling it antinational

இந்தநிலையில் ஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு பீட்டா பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பீட்டா இந்தியா வெளியிட்டு உள்ள அறிக்கையில், பீட்டா அமைப்பு, சட்டத்தை உருவாக்கும் அமைப்பு அல்ல, சட்டத்துக்கு கட்டுப்பட்ட அமைப்பு. இத்தகைய விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது.

காளைகளை துன்புறுத்துவதை தடை செய்த மத்திய அரசின் சட்டங்களில் எங்களின் தலையீடு எதுவும் இல்லை. விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.

எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
peta india slams on tamilnadu Opposition leader M.K.Stalin's statement about jallikattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X