For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

உலகப்புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை மூலவராக கொண்ட ஒரே குடவறைக்கோவில் இதுவாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. கோவில் திருப்பணிகள் முடிவடைந்து யாகசாலையில் 101 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கியது.

Pillaiyarpatti karpaga vinayagar temple kumbabisekam

இன்று அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து பிள்ளையார்பட்டி கோயில் குடைமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோபுரகலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

[Read This: முதல்வன்]

English summary
The mahaakumbabishekam of the Karpaga Vinaaayagar temple at Pillayaarpatti was performed on today after seven days of yagasalai poojas.Kumbabishekam rituals were performed for the Karpaga Vinayagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X