For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம்: படிக்கட்டில் பயணம் செய்த ப்ளஸ் டூ மாணவன் தவறி விழுந்து பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூர் அருகே அரசுப் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு கடந்த 2தினங்களாக செயல்பட்டு வருகின்றன. இன்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன

Plus 2 student travelling on footboard of bus falls to death

சேலையூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் சுரேஷ், ப்ளஸ் 2 படித்து வருகிறார். அரசு பேருந்தில் இன்று பள்ளிக்கு சென்ற மாணவன், கூட்டம் அதிகமாக இருக்கவே, படிக்கட்டில் பயணம் செய்தார். மேடு பள்ளமாக இருந்த சாலையில், பயணித்த போது தடுமாறி விழுந்த மாணவன் மீது சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆபத்தான படிக்கட்டு பயணங்களால் பல பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை நகரில் அன்றாடம் இவ்வாறு நகர்ப் பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது தவறி விழுந்து ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைபவர்கள்

அண்மையில் படிக்கட்டுக்களில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் இவ்வாறான துயர் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்

English summary
Plus 2 Student who was travelling on the footboard of an MTC bus slipped and died near Selaiyur on Monday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X