For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக இல்லை இனி ஊதிமுக தான்… அடித்து ஆடும் டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க.வை இனி ஊ.தி.மு.க. என்று அழைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். 2016ல் பா.ம.க. ஆட்சிதான் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணி உருவெடுக்கும் என தெரிவித்தார்.

PMD founder Dr. Ramadoss name change to ADMK

ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டில் அவருக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது.

மணல் கொள்ளையில்அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறது. கட்டிடம் கட்டப்படுகிறது என்றால், சி.எம்.டி.ஏ.க்கு சதுர அடிக்கு ரூ.50 வழங்கப்பட வேண்டும்.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறைகள் தான் ஊழலின் ஊற்று. சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று வரையறை வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.

ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்கிறார்கள்.அ.தி.மு.க.விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம்.

அதாவது, ஊழல் தி.மு.க. அ.தி.மு.க.வை குறை சொல்வதால் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க.வுக்கு மட்டும் தான்.

அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. 2016ல் பா.ம.க. ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய செயற்குழு உறுப்பினர்களும், தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டவர்களும் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

English summary
Pattali Makkal Katchi (PMK) founder S Ramadoss on Thursday said that his party would form an alliance that will be an alternative to both the AIADMK and DMK, for the 2016 Assembly elections. Speaking at the conclusion of the party’s executive meeting on Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X