ஆர்.கே. நகரில் பாமக போட்டியில்லை... யாருக்கும் ஆதரவில்லை - டாக்டர் ராமதாஸ்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து காலியான ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

பிரதான கட்சிகளாக அதிமுக, திமுக வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளன. அதிமுக பிளவு பட்டுள்ள நிலையில் இரு அணிகளுமே வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் நலக்கூட்டணி போட்டியிடலாமா? அல்லது யாருக்காவது ஆதரவு தரலாமா என்று பேசி வருகின்றனர்.

யாருக்கும் ஆதரவில்லை

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப் போவதில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் பணபலமே ஆதிக்கம் செய்யும் என்றும் கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

சோளக்கொல்லை பொம்மை

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சோளக்கொல்லை பொம்மை போல உள்ளதாக குற்றம் சாட்டிய ராமதாஸ் இடைத் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்று கூறப்பட்டாலும் அவ்வாறு நடைபெறாது என்று கூறினார்.

இடைத்தேர்தல் புறக்கணிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 2015 ஆண்டு ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலை புறக்கணித்தது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையும் புறக்கணித்தது. தற்போது ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகான இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளது.

பலமுனை போட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறது. திமுக பல கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளது. வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்த உள்ளது.

பலமுனை போட்டியால் ஜகா

பலமுனை போட்டி நிலவுவதால் பாமக பின்வாங்கிவிட்டது என்றே கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா போட்டியிடும் போது பாமக வேட்பாளரை களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
PMK not to contest Chennai's RK Nagar assembly bypoll. PMK founder Dr. Ramadoss today alleged that money power plays a 'larger role' in bypolls and decided not to contest the byelection to the R K Nagar Assembly constituency in Chennai.
Please Wait while comments are loading...