For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ம.க தலைமையில் கூட்டணி: மதிமுக உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அணியில் இணைய 8 கட்சிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பாமகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார்.

PMK reasserts itself, keen to lead alliance for 2016 elections

இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமக தலைமையிலான மாற்று அணியின் முழக்கமாக பூரண மதுவிலக்கு இருக்கும். இதையே தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல உள்ளோம்.

2016-இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பாமகவால்தான் முடியும்.

இந்த நேரத்தில் காங்கிரஸில் இருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன் கட்சி, மதிமுக, புதிய தமிழகம், காந்திய மக்கள் கட்சி, நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய முன்னணி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய 8 கட்சிகள் பாமகவை ஆதரிக்க முன் வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது போல் தற்போதும் குரல் கொடுக்க நடிகர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

முன்னதாக பாமக பொதுக்குழுவில், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பாமக கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பாமகவின் பொதுக் குழு தீர்மானிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
A day after projecting former Union minister Anbumani Ramadoss as its chief ministerial candidate in Tamil Nadu, PMK on Friday passed resolutions in its general body meeting vowing to capture power by defeating the key Dravidian parties, AIADMK and DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X