ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வழக்கை முடித்து வைக்க லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

காட்பாடி அடுத்த லத்தேரி பள்ளக்கொல்லையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் உள்பட 3 பேர் கடந்த ஆண்டு பொது இடத்தில் தகராறு செய்ததாக லத்தேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று 3 பேரும் வெளியில் உள்ளனர்.

 A police inspector was arrested for bribe

இந்த நிலையில், வழக்கை முடித்து வைக்கக் கோரி சம்பத் உள்பட 3 பேரும், லத்தேரி இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரனை அணுகினர். வழக்கை முடித்து வைக்க இன்ஸ்பெக்டர் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், இறுதியில் 8 ஆயிரம் தருவதற்கு 3 பேரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை இன்று காலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் லஞ்சப் பணத்தை சம்பத் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாபு ரவிச்சந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

UP Police inspector spotted in obscene position with woman, gets drunk on duty | Oneindia News

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
A police inspector was arrested while allegedly accepting Rs 8000 as bribe from a former Panchayat President in Latheri.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்