For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவிற்கு தமிழக மீனவர் அனுமதிக்கப்படுவார்களா? பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழாவில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்வதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தற்போது கச்சத்தீவில் புதிய சர்ச் கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. அவ்விழாவுக்கு தமிழக மீனவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவிற்கு தமிழக மீனவர் சிலராவது அனுமதிக்கப்பட வேண்டுமென முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவில் அமைந்துள்ள கத்தோலிக்க கிருத்துவ தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆலயத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துதொள்வது நீண்ட நாள் நடைமுறை.

 Pon.Radhakrishnan statement about Katchatheevu anthoniyar temple festival

ஆனால், தற்போது கச்சத்தீவில் புதிய சர்ச் கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா வரும் டிசம்பர் 7ந்தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளிவுறவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, இத்திறப்பு விழாவில் புதிய சர்ச் கட்ட உதவியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்விழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். தாக அவர் கூறினார்.

மேலும் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் மார்ச் மாத திருவிழாவின் போது இந்திய இலங்கை பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இலங்கத் தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும் தற்போது நடைபெற உள்ள புதிய சர்ச் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியத் தரப்பில் சிலரையாவது அனுமதிக்க வேண்டுமென்று முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூற்பபட்டுள்ளது.

English summary
Union Minister of State for Road Transport, Pon.Radhakrishnan statement about Katchatheevu anthoniyar temple festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X