For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி-ஸ்டாலின் மோதல் "உச்சகட்டம்"... கதிகலங்கும் திமுக நிர்வாகிகள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்...

திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் 'தளபதி' ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.

கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார்.

கனிமொழிக்கு ரெட்கார்ட்

கனிமொழிக்கு ரெட்கார்ட்

அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரையும் ஓரம்கட்டி ஒதுக்குவதில் ஸ்டாலின் தரப்பு படுதீவிரமாக இருந்து வருகிறது. இதுதான் ஸ்டாலின் மீதான கருணாநிதியின் கோபத்துக்கு அடிப்படை காரணம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

லேட்டாக வந்த ஸ்டாலின்

லேட்டாக வந்த ஸ்டாலின்

கடந்த வாரத்தில் நிகழ்ந்த 2 நிகழ்வுகள் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உச்சகட்ட மோதலை அம்பலப்படுத்தியது என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. திமுகவின் முப்பெரும் விழா கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவுக்கு கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னரே வந்துவிட்டனர். ஆனால் ஸ்டாலின் சுமார் 40 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.

பதிலடி கொடுத்த கருணாநிதி

பதிலடி கொடுத்த கருணாநிதி

அப்போதே கருணாநிதி பயங்கர அப்செட்டாம்... இந்த விழாவில் பேசியவர்களும் ஸ்டாலினை தூக்கி வைத்து பேசினர்.... இந்த பேச்சுகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில்தான், நான் 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தில் பணியாற்றி​யிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். நான் இருந்து இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பேன். இன்னும் பல மடங்கு வெற்றிகளை இந்த இயக்கத்துக்கு பெற்று தருவேன். நான் இருக்கும் வரை அல்ல, இல்லாதபோதும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதற்கு என்னென்ன திட்டங்கள் தீட்ட முடியுமோ அதை​யெல்லாம் செய்துவிட்டுத்தான் இந்த கருணாநிதி போவான். என்னுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்து சொன்னாலும்கூட நான் ஓய்வு பெறமாட்டேன். மறந்தும்கூட நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன் என்று சொல்​லமாட்டேன் என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

மா.செ.க்கள் கூட்டத்திலும்...

மா.செ.க்கள் கூட்டத்திலும்...

இதை ஸ்டாலின் தரப்பு ரசிக்கவில்லையாம்... மறுநாள் மாவட்ட செயலர்கள் கூட்டத்திலும் அப்பா - மகன் மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட செயலர்கள் கூட்டம் என போடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் 11 மணிக்குதான் வந்தார். கருணாநிதியோ இந்த மாவட்ட செயலரைக் கூட்டத்தையே புறக்கணிக்கும் முடிவில் இருந்தார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு.

வாசன், திருநாவுக்கரசர்

வாசன், திருநாவுக்கரசர்

இதேபோல் ஜி.கே.வாசனை கூட்டணிக்கு கொண்டுவருவது குறித்து தம்மிடம் ஸ்டாலின் ஆலோசிக்கவில்லை என்பது கருணாநிதியின் மற்றொரு ஆதங்கம்.. இதனால்தான் ஸ்டாலினும் ஜிகே வாசனும் பேசிக் கொண்டிருந்த போதே திருநாவுக்கரசருக்கு தம்மை சந்திக்க நேரம் ஒதுக்கி அழைப்பு விடுத்திருக்கிறார் கருணாநிதி. அத்துடன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் எனவும் சொல்ல வைத்திருக்கிறார். இப்படி அப்பாவும் மகனும் ஒவ்வொரு நகர்விலும் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் எந்த பக்கம் சாய்வது? எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர் திமுக நிர்வாகிகள்..

English summary
The power struggle appears to be deepening in the DMK with the party leader M Karunanidhi and his son and the party treasurer MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X