For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுப்பது பொறுப்பற்ற செயல் - பி.ஆர்.பாண்டியன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

மன்னார்குடி: காவிரி விகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து வருவது பொறுப்பற்ற செயலாகும் என்று தமிழக அனைத்து விவாசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவி்த்தார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுத்துவருவது பொறுப்பற்ற செயலாகும். உச்சநீதிமன்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிவீதம் அக்டோபர் 6ம் தேதி வரை தண்ணீரை விடுவிப்பதற்கும், நான்கு தினங்களுக்குள்ளாக காவிரி மேலாண்மைவாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைத்திடவும் உத்திரவிட்டுள்ளது.

PR Pandiyan Press Meet

இந்த உத்தரவை மத்திய அரசு உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கர்நாடக கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள், தீயிட்டு கொளுத்தப்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்களுகும் உரிய இழப்பீட்டு தொகையினை கர்நாடக அரசு வழங்கிடவும், உடன் கர்நாடக வழியாக தமிழக லாரி போக்குவரத்திற்கு உரிய அனுமதியும் பாதுகாப்பையும் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் சென்னை ஆளுநர் மாளிகை முன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரதபோராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

English summary
Farmer's Coordinator PR Pandiyan meet press at mananrkudi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X