For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆழ்துளை கிணறமைக்க வந்த தனியார் நிறுவனத்தை விரட்டியடித்த சேலம் மக்கள்! - வீடியோ

சேலத்தில், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து விறபனை செய்ய ஒரு தனியார் நிறுவனம் முயன்ற போது, மக்கள் அவர்களை முற்றுகையிட்டு விரட்டியடித்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: மக்கள் குடிநீருக்காக பல மைல்தூரம் நடந்து அலைந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், தண்ணீர் விற்கும் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து இருக்கும் தண்ணீரை உறிஞ்ச முயன்றது. அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்த காரணத்தால் ஆறு, குளம், ஏரி போன்ற நீராதாரங்களில் தண்ணீர் இல்லை. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 Private aqua company give up its trial in salem

மேலும், தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்துக்குச் சென்று விட்டது. கோவை உள்ளிட்ட பகுதிகளில் 1000 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து, நீஎ எடுக்கின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் குடிநீருக்காக மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அங்கு குடிநீர் விற்கும் நிறுவனம் ஒன்று ஆழ்துளை கிணறு அமைத்து நீர் எடுக்க முயற்சித்துள்ளது. நிலத்தினடியில் இருக்கும் கொஞ்சம் நீரையும் இம்மாதிரியான நிறுவனங்கள் லாபத்துக்காக உறிஞ்சிவிட்டால், சாதரண மக்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டு, அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

பிறகு காவல்துறையினர் தலையிட்டு, அந்த நிறுவனத்தை வெளியேற வலியுறுத்திதயதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

English summary
A private aqua company tried to establish deep bore well and exploit local people in Salem. Against this people stage a protest and the company give up its exploitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X