For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடியூரப்பாவுக்கு நேர்ந்தது இப்போது எடப்பாடிக்கு... தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களால் கஷ்டம்!

கர்நாடகத்தில் பிஎஸ் எடியூரப்பாவுக்கு நேர்ந்த நெருக்கடி இப்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நேர்ந்துள்ளது. அப்போது நடந்த விவகாரங்களை நினைவூட்டியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடி பழ

By Devarajan
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி-ஓபிஎஸ் இணைப்பை கண்டிக்கும் டிடிவி-வீடியோ

    சென்னை: 2011ம் ஆண்டு கர்நாடகாவில், பிஎஸ் எடியூரப்பாவுக்கு நேர்ந்த நெருக்கடி இப்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நேர்ந்துள்ளது. அப்போது நடந்த விவகாரங்களை நினைவூட்டியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

    தமிழக அரசியல் களம் பரபரப்புக் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர். இது இன்னும் கூடுதல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை ஆளுநர் மாளிகையில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் 19 பேர், முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்தனர். அதிமுக வட்டாரம் தாண்டி மற்ற அரசியல் கட்சிகளும் பரபரப்பில் உள்ளன.

    தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் தனித்தனியே ஆளுநரிடம் அளித்துள்ள கடிதத்தில், ' நல்ல முதல்வராகச் செயல்படுவார் என்ற எண்ணத்தில் பழனிச்சாமிக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் அவரோ அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஊக்குவித்து வருகிறார்' என்று பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜெ. கனவைச் சிதைத்த முதல்வர்

    ஜெ. கனவைச் சிதைத்த முதல்வர்

    மேலும் அந்தக் கடிதத்தில், " அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற மறைந்த ஜெயலலிதாவின் கனவை முதல்வர் சிதைத்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். எங்களது நம்பிக்கையைத் தக்க வைக்கும் வகையில் முதல்வர் செயல்படவில்லை.

    முதல்வர் மீது நம்பிக்கை இழப்பு

    முதல்வர் மீது நம்பிக்கை இழப்பு

    முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்த போதும், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராகத் தொடர்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.

    ஆதரவு வாபஸ்

    ஆதரவு வாபஸ்

    தங்களின் நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் முதலமைச்சர் இழந்துவிட்டதால், ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்எல்ஏக்களும் தங்களின் தனித்தனி கடிதங்களில் கூறியுள்ளனர்.

    கட்சி நற்பெயருக்குக் களங்கம்

    கட்சி நற்பெயருக்குக் களங்கம்

    மேலும் அவர்கள் கடிதங்களில், " முதல்வராக இருப்பவர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். முதல்வரின் ஊழலால் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டது. முதல்வர் பழனிச்சாமி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்.

    கர்நாடக எம்எல்ஏக்கள் மாதிரி

    கர்நாடக எம்எல்ஏக்கள் மாதிரி

    கடந்த 2011ம் ஆண்டு கர்நாடகாவில், பிஎஸ் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவர் அரசுக்கும் பாலச்சந்திரா எல். ஜார்க்கி ஹோலி தரப்புக்கும், இப்போதைய தமிழக ஆளுங்கட்சி நிலை போலவே ஒரு பிரச்சனை இருந்தது.

    உரிய நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும்

    உரிய நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும்

    அது பற்றி உச்சநீதிமன்றம் விளக்கமாகத் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் , அ.தி.மு.க. வின் ஒரு சட்டசபை உறுப்பினராகிய நான் எனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கையைத் தாங்கள் எடுக்க வேண்டும்.

    இதுபோன்றதொரு சூழல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ல் ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான நான், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அதிகார துஷ்பிரயோகம் செய்யும் முதல்வர்

    அதிகார துஷ்பிரயோகம் செய்யும் முதல்வர்

    மேலும் ஜெயலலிதாவின் கொள்கைபடி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தவில்லை. தமிழக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவே ஆதரவு வாபஸ் பெறப்பட்டது.

    சட்டப்படி நடவடிக்கை வேண்டும்

    சட்டப்படி நடவடிக்கை வேண்டும்

    எனவே, அவருக்கான ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்கிறோம். இவ்விவகாரத்தில் சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    TTV Dinakaran MLAs meet Tamil Nadu Governor for seek CM's ouster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X