For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு: பெருநெருப்பாய் போராடும் தமிழகம்- live

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் அறவழிப் போராட்டங்களை தொடருகின்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு என்கிற தமிழரின் பண்பாட்டு உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் இடைவிடாத அமைதிவழி அறப்போரை நடத்தி வருகின்றனர்.

இந்தி எதிர்ப்புக்கு எதிராக, 1980களில் இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிரான கிளர்ச்சிகளைவிட மிக தீவிரமடைந்துள்ளது ஜல்லிக்கட்டுக்கான பேரெழுச்சிப் போராட்டம்.

-தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம் - சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம்

-ஜல்லிக்கட்டு தடை நீக்கும் வரை போராடுவோம்

-முதல்வரிடம் போராட்டக்குழு திட்டவட்டம்

-போராட்டத்தைக் கைவிடும்படி ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார்.

-ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என உறுதி

-விடுதிகளில் இருந்து மாணவர்கள் உடனே வெளியேற சென்னை அண்ணா பல்கலை உத்தரவு

-ஜல்லிக்கட்டு போராட்டத்தை முறியடிக்க தீவிரம்

-அரசு, தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

-செல்போன் ஒளியில் மெரீனாவில் போராட்டம் நீடிக்கிறது

-ஏராளமான போலீஸ் மெரீனாவில் குவிக்கப்பட்டுள்ளனர்

-எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட போலீஸ் தடை

-விவேகானந்தர் நினைவு இல்லம் அருகே செல்ல போலீஸ் அறிவுறுத்தல்

-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்

-22ஆம் தேதிவரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு

-மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறவும் உத்தரவு

-சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி

-ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினருடன் பேசினேன் - ஓ.பி.எஸ்

-போராட்டக்குழுவினருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது - ஓ.பி.எஸ்

-நம்பிக்கையுடன் செல்கிறேன் நிவாரணம் கிடைக்கும் - ஒ.பி.எஸ்

-பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறேன் - ஓ.பி.எஸ்

-ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தலையிட வலியுறுத்துவேன் - ஓ.பி.எஸ்

-தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் தெரிவிப்பேன் - ஒபிஎஸ்

-முதல்வர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

-ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி

-போராட்டக்குழுவினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை

-முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

-ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி 2வது நாளாக போராட்டம்

-இளைஞர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பதற்றம்

-மதுரை தமுக்கம் மைதானம் அருகே கட்டத்தில் ஏறி மாணவர் தற்கொலை முயற்சி

-ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல்

-கட்டடத்தில் ஏறி சக மாணவர்கள் சமாதனப்படுத்தியதால் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது.

-தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய அலங்காநல்லூரில் தீர்மானம்

-ஜல்லிக்கட்டு நடத்த மாலை 6 மணிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அலங்காநல்லூரில் தீர்மானம்

-ஜல்லிக்கட்டு நடத்த 6 மணிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அலங்காநல்லூர் மக்கள் வலியுறுத்தல்

-50 தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்யுங்கள் - அலங்காநல்லூர் மக்கள்

-மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி

-ஜல்லிக்கட்டுக்காக காலை முதலே மாணவர்கள் போராட்டம்

-பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மைதானத்தில் திரண்டுள்ளனர்

-ஐடி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

-சென்னை ராமாபுரம் டிஎல்எஃப் அருகே தடியடி

-ராமாபுரத்தில் பதற்றம் நிலவுகிறது

-ஐடி ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

-தரமணியில் மனித சங்கிலிப் போராட்டம்

-ஆயிரகணக்கானோர் பேனர்களை ஏந்தி போராட்டம்

-ஜல்லிக்கட்டு ஆதரவாக திரண்ட ஐடி இளைஞர்கள்

-ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள தரமணியில் இளைஞர்கள் போராட்டம்

-கொளுத்தும் வெயிலில் கடற்கரையில் குவிந்த மாணவர் கூட்டம்

-கடல்போல திரண்ட மாணவர்களால் ஸ்தம்பித்த மெரீனா

-கவின்கலை கல்லூரி மாணவர்கள் மெரீனா நோக்கி பேரணி

-ஐடி ஊழியர்களும் மெரீனா நோக்கி பேரணியாக வருகை

-அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல தமிழகத்தில் வெடித்தது 'கார்த்திகை பூ' புரட்சி!

-ஆரணி கோட்டை மைதானத்தில் பேரணியில் தீக்குளிக்க முயற்சி

-வேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் இப்ராகிம் தீக்குளிக்க முயற்சி

-தஞ்சை தலைமை தபால் நிலையம் 3,000 மாணவர்கள் மறியல்

-அலங்கநால்லூர் போராட்டத்தில் பெண் மயக்கம்

-சென்னை ஓஎம்ஆர் சாலையில் மாணவர்கள் மீது தடியடி

-மாணவர்கள். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

-சாலை மறியல் போராட்டத்தால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து முடக்கம்

-போலீசார் தடியடியால் மாணவர்களுக்கு படுகாயம்

-நாலாபுறமும் சிதறி ஓடியதால் ஓஎம்ஆர் சாலையே போர்க்க்களமானது

-அலங்காநல்லூர்- மதுரை சாலையில் போராட்டம்

-தேனி பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் போராட்டம்

-திருச்சி உழவர் சந்தை அருகே இளைஞர்கள் போராட்டம்

-பொன்னேரி திவேங்கடபுரத்தில் இளைஞர்கள் போராட்டம்

Pro-jallikattu protests across Tamil Nadu

-ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலை. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

-பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

-மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்

-தமுக்கம் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் மதுரையில் போக்குவரத்து முடக்கம்

-பாம்பனில் தூக்கு பாலத்தின் மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- கைது

-திருமங்கலம் கரடிக்கல்லில் மாணவர்கள் போராட்டம்

-காஞ்சிபுரத்தில் 2-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

-திண்டுக்கல் கல்லறைத் தோட்டம் அருகே 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

English summary
The massive state wide protests by youth in Tamil Nadu who are demanding to lift the ban for Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X