For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அனுமதியின்றி திடீரென போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: திடீரென போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனுமதியின்றி அடிக்கடி திடீரென போராட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், அனுமதி பெறாமல் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மருத்துவமனை உள்ள சாலைகளில் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பொது நல வழக்கு

பொது நல வழக்கு

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, தமிழகத்தில் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடும் தனி நபர் மற்றும் குழுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்லஸ் கோரியிருந்தார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான அனுமதி பெறமால் போராட்டம் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முடித்து வைப்பு

முடித்து வைப்பு

டிஜிபிக்கு

டாஸ்மாக் போராட்டம்

டாஸ்மாக் போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் ஆங்காங்கே திடீர் திடீரென போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை குறித்து வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
High Court Madurai ordered DGP that protesters, who do not get permission, can be taken action to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X