ஒதுக்கப்பட்ட சசிகலா குடும்பம்... மக்களின் மனநிலை என்ன?

சிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 70 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா போலவே நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றினார் சசிகலா. ஜெயலலிதாவைப் போலவே அய்யங்கார் நாமம், சிகை அலங்காரம், காலர் வச்ச ஜாக்கெட் என இத்தனை நாள் இதற்காக தான் காத்திருந்தது போல் உடனடியாக இன்னொரு ஜெ.,வாக மாறினார் சசிகலா.

ஜெ.வை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசி

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே யாரையும் பார்க்கவிடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சசிகலா. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் என யாரையும் ஜெயலலிதாவை சந்திக்கவிடவில்லை சசிகலா.

சசிகலாவே காரணம்

வீட்டில் நடந்த மோதலில் சசிகலா ஜெயலலிதாவை தாக்கினார். அதனாலேயே உடல்நலக்குறைவு எற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்ததாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது.

மக்கள் மத்தியில் எரிச்சல்

இந்நிலையில் முதல்வர் நாற்காலியில் அமர முயன்ற சசிகலா, ஜெயலலிதாவுக்கே தான்தான் அரசியலை ஊட்டியதாக கூறினார். சசிகலாவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு எதிர்ப்பு

கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் குடும்பத்தினரின் கரங்களுக்கு சென்றதை விரும்பாத அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன.

மக்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத குடும்பத்தினர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட குடும்பத்தினர் கட்சியிலிருந்து விரட்டப்பட்டிருப்பது அதிமுக அடிமட்ட தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Public feeling happy of expelling sasikala family from party. The Tamil nadu ministers announced after the meeting that Sasikala family is expelled from the party.
Please Wait while comments are loading...