For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு விலக்கு பெற அவசர சட்டம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puducherry CM Narayanasami conducted all party meeting on the NEET exam

எனவே, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் என்ன நிலை என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் நாராயணசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்தது.

இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் என்பது கண்துடைப்பு நாடகம் என பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். இதேபோல் என்.ஆர். காங்கிரசும் இக்கூட்டத்தை புறக்கணித்தது.

English summary
Puducherry chief minister Narayanasami conducted all party meeting today on the NEET exam. But BJP and NR congress MLAs boycotted this meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X