கிரண்பேடியை ஹிட்லர் என போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் கிண்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி :துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி மாநில காங்கிரஸ் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கிரண்பேடியை ஹிட்லர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த மே மாதம் அவர் பொறுப்பேற்றதில் இருந்தே மோதல் அரங்கேறி வருகிறது. அரசு அதிகாரிகள் வாட்ஸ் அப் பயன்பாட்டில் தொடங்கி, மருத்துவ கலந்தாய்வு முதல் அனைத்திலும் கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் நேரடி சண்டை நடந்தது.

கடைசியாக புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்ததில் அதிகாரச் சண்டையானது இரண்டு பேருக்குமிடையே முற்றியது. இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

'ஹிட்லர்' கிரண்பேடி

நேற்று தவளக்குப்பத்தில் புதுச்சேரி அரசு கொறடாவும், மணவெளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனந்தராமன் தலைமையில் கிரண்பேடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட போஸ்டரில் 'இங்கே ஒரு ஹிட்லர்' என்று வசனம் எழுதி, கிரண்பேடிக்கு குட்டி மீசையும், ஹிட்லர் தொப்பியும் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

துரத்தி செல்வது போல போஸ்டர்

மற்றொரு போஸ்டரில் கிரண்பேடி முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து எம்எல்ஏக்கள் விரட்டிச் செல்வது போன்ற ஒரு பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்களையெல்லாம் கிரண்பேடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வதம் செய்யும் பத்ரகாளி

அதே போன்று புதுவையை காக்க வந்த பத்ரகாளியே என்று வெற்றி மங்கைக்கு வீர வாழ்த்து என்றும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் காளி கிரண்பேடி கையில் நாராயணசாமி மற்றும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் தலைகள் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

 வைரலாகும் போஸ்டர்கள்

வைரலாகும் போஸ்டர்கள்

முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண்பேடியை, அவரது துணை நிலை ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்காமல் ஒட்டப்பட்ட இழிவான போஸ்டர்கள் சமக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரண்பேடி டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள போஸ்டர்களுக்கு பலரும் அவருக்கு ஆதரவான கருத்துகளையே பதிவிட்டு வருகின்றனர்.

 ஆதரவு கருத்துகள்

ஆதரவு கருத்துகள்

நேர்மையாக செயல்படும் போது இது போன்ற இக்கட்டுகள் வரும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பலரும் கிரண்பேடிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு ஜோக்கர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பலர் விமர்சித்துள்ளனர்.

Anbalagan Slammed lieutenant governor Kiran Bedi-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Kiran Bedi, tweeted a series of posters lampooning her as Hitler and Goddess Kali which have apparently been taken out by members of the ruling Congress.
Please Wait while comments are loading...