For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரியில் இன்று 60 ஆவது சுதந்திர தினம் – தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழாவினை ஒட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி புதுவை விடுதலை பெற்றது.

ஆனால் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியே புதுச்சேரியிலும் அரசு சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

Puducherry’s 60th independence day today…

நவம்பரில் கொண்டாட்டம்:

நவம்பர் 1 ஆம் தேதி புதுவை சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

60 ஆவது சுதந்திர தினவிழா:

அதன்படி புதுவையின் 60 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாட அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தேசியக் கொடி ஏற்றி மரியாதை:

விழா நடக்கும் கடற்கரை சாலை காந்தி திடலுக்கு முதல்வர் ரங்கசாமி காலை 8.29 மணிக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

மின்விளக்கு அலங்காரங்கள்:

சுதந்திர தினத்தையொட்டி புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை மற்றும் தேச தலைவர் சிலைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அரசு அலுவலகங்கள் விடுமுறை:

புதுவை சுதந்திர தினவிழாவையொட்டி புதுவை மாநிலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

English summary
Puducherry’s 60th Independence Day was celebrated by that government today. CM Rangasami Hoisting the flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X