For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடிய விடிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி போராடிய புதுச்சேரி மாணவர்கள்!

புதுசேரியில் மாணவ, மாணவியர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 5000 கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இரவிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இரவு முழுதும் நடந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Puducherry students conducted protest even in night!

இதுகுறித்து மாணவி ஒருவர் கூறும்போது, ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்று கூறும் பீட்டா எல்லா விலங்குகளையும் துன்புறுத்திக் கொள்கிறது. அதற்கு ஜல்லிக்கட்டு குறித்து பேசுவதற்கும் தடை வாங்குவதற்கும் என்ன தகுதி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டை நீக்க சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல் இருக்கிறது? காளை மாடுகளை அழிக்கத் திட்டம் தீட்டுகிறார்களா? முன்பு 100 மாடுகளுக்கு 4 காளைகள் இருந்தன. இப்போது 100 மாடுகளுக்கு 8 காளைகள் தான் இருக்கின்றன. இதன்மூலம், நாட்டு பசுக்களின் பால் கிடைக்காமல் வெளிநாட்டு பசுக்களின் பால் குடித்து நோயை வாங்க வேண்டுமா? என பல எழுப்பினார்.

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு மாணவர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

English summary
Puducherry college students protested against jallikattu ban even in night. During the protest they conducted several cultural programs in which they expressed their anger pver peta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X