டிசைன் டிசைனாக பேஸ்புக்கில் படம் காட்டினார் ரூபா... புகழேந்தி அதிரடி தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ஐபிஎஸ் அதிகாரியும் செய்யாத ஒரு காரியமாக பேஸ்புக்கில் தன்னை விதவிதமாக புகைப்படம் எடுத்து போட்டதற்காக மெமோ வாங்கியதிலிருந்து தப்பிக்க உயரதிகாரி சத்திய நாராயணராவ் மீது ரூபா குற்றம்சாட்டியுள்ளார் என்று புகழேந்தி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபா அம்பலப்படுத்தினார். இந்நிலையில் சென்னையில் உள்ள டிடிவி தினகரனை சந்திக்க கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வந்தார்.

Puzhendhi slams DIG Roopa on accusing Sasikala

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிஐஜி ரூபா கடந்த 30-ஆம் தேதி சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலா குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை டிசைன் டிசைனாக பிடித்து போட்டுள்ளார்.

எனக்கு தெரிந்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன் புகைப்படத்தை இதுவரை வெளியிட்டதில்லை. தகவலறிந்த சிறை துறை டிஐஜி சத்தியநாராயண ராவ், ரூபாவுக்கு மெமோ கொடுத்தார். மேலும் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்ட கூட்டத்தில் ரூபா கலந்து கொள்ளாததற்கும் மெமோ வழங்கப்பட்டது.

இந்த மெமோவிலிருந்து தப்பிக்க இன்னும் சில நாள்களில் ஓய்வு பெறவுள்ள சத்தியநாராயண ராவ் மீது குற்றச்சாட்ட முயற்சித்தார் ரூபா. அதற்கு சசிகலாவை கையில் எடுத்துள்ளார். இவர் மீதான தவறை மறைக்க தாய் ஸ்தானத்தில் உள்ள சசிகலா மீது குறை சொல்வதா?.

சசிகலா சொகுசாக உள்ளதாக வெளியிடப்பட்ட வீடியோ அபத்தமானது. கிராபிக்ஸ் படமாக வெளியிட்டுள்ளனர் என்று கொந்தளித்தார் புகழேந்தி.

Jayalalitha also stayed in Parappana Agrahara prison like where Sasikala stays-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Karnataka state ADMK secretary Puzhendhi condemns DIG Roopa on accusing Sasikala.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்