ஜெ. மறைவுக்குப் பின் நித்த நித்தம் ரெய்டு மாநிலமாகிப் போன தமிழகம்- தொடரும் பதற்றம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தொடரும் ரெய்டுகளால் தமிழகத்தில் பதற்றம் நீடித்தே வருகிறது.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகம் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகளால் தொடர்ந்து பதட்டத்திலேயே வைக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போதே தமிழகத்தின் அரசியல் நிலையற்றதாக உருவெடுத்துவிட்டது.

ஜெயலலிதா மறைந்துவிட்டார்... கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியேவிட்டார்.. அப்புறமென்ன தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.

சேகர் ரெட்டி

ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே போயஸ் கார்டனுக்கும் அதிமுக மூத்த அமைச்சர்களுக்கும் பினாமி இருந்த சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் பெட்டி பெட்டியாக பணம், தங்க கட்டிகள், கட்டு கட்டாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின.

ராமமோகன் ராவ்

பின்னர் சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழகத்தின் தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவ், அவரது மகன் வீடுகளுக்குள் வருமான வரித்துறை நுழைந்தது.

தலைமை செயலகத்தில்...

இதன் உச்சகட்டமாக இந்தியாவிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழக அரசின் தலைமை செயலகத்துக்குள்ளும் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினர். அத்துடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கமான பல இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

திமுகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள்

பின்னர் திமுகவுடன் நெருக்கமான சில நிறுவனங்களில் வருமான வரித்துறையின் சோதனை ஜனவரி மாதம் நடைபெற்றது. அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் டெல்லியின் சதியாக இது பார்க்கப்பட்டது. பின்னர் ஆர்கே நகர் தேர்தல் களைகட்டத் தொடங்கியது.

விஜயபாஸ்கர் வீடு

அப்போது தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஆர்கே நகரில் ரூ89 கோடிக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் விஜயபாஸ்கரின் பினாமி என கூறப்படும் நாமக்கல் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

கீதாலட்சுமி, சரத்குமார்

மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, சரத்குமார், ராதிகா ஆகியோரிடம் இப்போதும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, சரத்குமார், ராதிகா ஆகியோரிடம் இப்போதும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் சுப்பிரமணியம்

இந்நிலையில் வருமான வரித்துறை விசாரணைக்குள்ளான நாமக்கல் சுப்பிரமணியம் திடீரென தற்கொலை செய்து கொள்ள மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிதம்பரம்

நாட்டின் நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என பொறுப்பு வகித்த சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நாள்தோறும் தொடரும் வருமான வரி, சிபிஐ சோதனைகள் தமிழகத்தை பாடாய்படுத்தி வருகிறது. இன்னும் யார் யார் வீட்டில் டெல்லி புகுமோ?

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
After Jayalalithaa's death, IT and CBI raids continue in TamilNadu.
Please Wait while comments are loading...