For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை – 24 மணி நேரத்தில் கனமழை

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain in Tamil Nadu within 24 hours – meteorological center

இதனால் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்பு பெருமளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டமான ராமேஸ்வரம் பகுதியில் அலைகள் மிகவும் சீற்றமாக இருப்பதால் மண்டபம், பாம்பன் மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளைத் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக இருப்பதால் குறைவான மீனவர்களே கடலுக்குச் சென்றனர்.இந்த மழை டிசம்பர் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

English summary
Lower-level pressure in Bay of Bengal increasing so, rain will fall more than two days in Tamil Nadu, Meteorological center says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X