For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு கட்சியும் சரியில்லை... இதுதான் ரஜினி சொல்ல வரும் சேதி!

Google Oneindia Tamil News

சென்னை: எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் கரப்ட் ஆகி விட்டது. அதை சரி செய்ய வேண்டும். மாற்றம் வர வேண்டும். இதுதான் ரஜினியின் இன்றைய பேச்சு. இதன் சாராம்சம் (அரசியலுக்கு வந்தால்) நான் தனியாகத்தான் வருவேன். தனிக் கட்சிதான் தொடங்குவேன் என்பதே.

ரஜினி மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். பல வருடமாக பூடகமாக பேசி வந்தார். இப்போது சற்று தெளிவாக குழப்ப ஆரம்பித்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று இப்போதும் கூட வெளிப்படையாக பேச அவர் தயாராக இல்லை. இருப்பினும் அரசியலை நோக்கி அவரும் மெல்ல மெல்ல நகர்ந்து வருவதை தனது பேச்சின் மூலமாக உணர்த்தி வருகிறார்.

இன்று ரசிகர்களுடன் நடக்கும் கடைசி நாள் சந்திப்பையொட்டி அவர் பேசுகையில் சில விஷயங்களை சற்றே தெளிவாகப் பேசினார். அதாவது கடந்த 20 வருடமாக இல்லாத அளவுக்கு இன்றுதான் கொஞ்சம் போல புரிவது போல பேசினார் ரஜினி.

யாருமே சரியில்லை

யாருமே சரியில்லை

மு.க.ஸ்டாலின், திருமாவளவன், சீமான், அன்புமணி என தமிழகத் தலைவர்களை பாராட்டினார் ரஜினி. எல்லோரையும் புகழ்ந்தார். அவர்களின் திறமைகளை பாராட்டினார். ஆனால் யாருமே சரியில்லை என்று மறைமுகமாக கூறி விட்டார் ரஜினி. எந்தக் கட்சியும் சரியில்லை என்பதும் ரஜினி பேச்சின் பூடக அர்த்தமாகும்.

சிஸ்டம் சரியில்லை

சிஸ்டம் சரியில்லை

எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் சரியில்லையே கெட்டு விட்டதே என்று ரஜினி கூறியுள்ளார். அதாவது இத்தனை பேர் இருந்தாலும் கூட எதுவும் சரியில்லை என்பது ரஜினியின் முடிவு.

நான் சரி செய்ய விரும்புகிறேன்

நான் சரி செய்ய விரும்புகிறேன்

அதை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதை நான் செய்ய விரும்புகிறேன் என்பதும் ரஜினி பேச்சு உணர்த்தும் சேதி. தனிக் கட்சி தொடங்கும் விருப்பத்தில் அவர் உள்ளதாகவும் அவரது பேச்சு காட்டுகிறது.

மனக்கிடக்கை

மனக்கிடக்கை

இத்தனை காலமாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறி வந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவுக்கு இன்றைய ரஜினி பேச்சு அமைந்துள்ளது. முதல் முறையாக அவர் "சிஸ்டம்" பற்றியெல்லாம் பேசியுள்ளார். இதுவும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இதுவரை உறுதியில்லை, ஸ்திரமில்லை

இதுவரை உறுதியில்லை, ஸ்திரமில்லை

ரஜினி இதுவரை எந்த முடிவையும் தெளிவாக, தீர்க்கமாக, உறுதியாக எடுத்ததில்லை. அவரது மன ஓட்டம் ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரியாக இருக்கிறது. நேற்று அரசியல் பற்றிக் கேட்காதீர்கள் என்றார், இன்று அவரே அரசியல் குறித்துப் பேசுகிறார். ஸோ, நாளை அவர் என்ன செய்வார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

English summary
Rajinikanth has indirectly said that all the parties in the state are corrupt and it has to be changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X