For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி - ராக்லைன் வெங்கடேஷ் பரபரப்பு பேட்டி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: லிங்கா படத்தை ஓட விடாமல் தடுக்க செய்யப்பட்ட எதிர்ப்பிரச்சாரம், ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க செய்யப்பட்ட சதி, என பரபரப்பாக பேட்டியளித்துள்ளார் ராக்லைன் வெங்கடேஷ்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்தே, அதன் விநியோகஸ்தர்களுள் ஒருவர், படத்துக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டார். ஊடகங்களும் அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டதால், நல்ல படமான லிங்காவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

Rajini will enter politics hundred percent, says Rockline Venkatesh

இதைத் தொடர்ந்து, மீடியாவிடம் பேசிய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா படத்தை அதன் விநியோகஸ்தர்களுள் ஒருவரான சிங்கார வேலன் என்பவர் தனது விஷம பிரச்சாரத்தால் கொன்றுவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், எகனாமிக் டடைம்ஸ் நாளிதழுக்கு ராக்லைன் வெங்கடேஷ் அளித்துள்ள பேட்டி:

லிங்கா வெளியீட்டில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டதா?

லிங்கா படம் உண்மையில் நல்ல திரைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை விற்க ஈராஸ் நிறுவனம் முனைந்தபோது, சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வாங்க முனைந்தனர். ஆனாவ் வேந்தர் மூவீஸைத் தேர்ந்தெடுத்தது ஈராஸ். ரஜினி சாரின் பிறந்த நாளன்று வெளியிடுவதாக இருந்தால் மட்டுமே, நீங்கள் சொல்லும் விலைக்கு வாங்குவோம் என வேந்தர் மூவீஸ் கூறியது. இதில் என்ன தவறு நேர்ந்தது? ஆனால் இந்த திருச்சி - தஞ்சை விநியோகஸ்தர் சிங்கார வேலன் படத்துக்கு எதிராக, வெளியான மூன்றாம் நாளிலிருந்தே பிரச்சாரம் செய்து வந்தார். அதை யுட்யூப் போன்ற தளங்களில் தொடர்ந்து செய்தார். தன்னுடன் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு, நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தார். ரஜினி தலையிட வேண்டும் என்றார். வெளியாட்கள் யாராவது இதைச் செய்திருந்தால் பரவாயில்லை. சினிமா என்ற குடும்பத்துக்குள் இருந்து கொண்டே சிங்கார வேலன் இப்படிச் செய்தது படத்தை பாதித்துவிட்டது.

சரி, இந்த சர்ச்சைக்கு உங்கள் பதில் என்ன?

என்னைப் பொருத்தவரை இது ரஜினி சார் பெயரை, அவரது செல்வாக்கைக் கெடுக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. அவர் அரசியலுக்குள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், அவருக்கு பயங்காட்ட செய்யப்பட்ட சதி.

தமிழகத்தில் ரஜினிக்கு மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அதைக் கெடுக்க செய்யப்பட்ட இந்த சதியில் சிங்கார வேலனுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வரப் போகிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் அடுத்து ரஜினி சாருக்கு அரசியல் வாய்ப்பு குறைவு. அவருக்கு இப்போது வயது 64.

ரஜினி அரசியலுக்கு வருவாரா?

ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி. எந்தக் கட்சி என்பது முக்கியமில்லை. மக்களுக்கு உழைப்பதுதான் ரஜினியின் நோக்கம். தமிழகத்தைப் பற்றி அவருக்கு ஒரு பார்வை உள்ளது. அவர் மிகச் சுத்தமானவர். தெய்வ பக்தி மிக்கவர். அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்து சேவை செய்யவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை, விருப்பம்.

இந்த சமீபத்திய சர்ச்சைகள் குறித்து ரஜினி என்ன நினைக்கிறார்?

இந்த சர்ச்சைகள், பிரச்சினைகளைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார் ரஜினி சார். படத்தின் வெற்றியைத் தடுக்க சிலர் வேண்டுமென்ற செய்த வேலை இது என்றுதான் அவர் நினைக்கிறார். ஆனால் அவர் கடவுள் நம்பிக்கை மிக்கவர். கடவுள் அவர் பக்கம் இருக்கும்போது, யாரும் அவர் இடத்தை மறுக்க முடியாது.

ஆனால் முன்பெல்லாம் படம் நஷ்டமடைந்தபோது ரஜினி தலையிட்டு உதவியிருக்கிறாரே...

கடந்த ஆண்டு பல படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால் யாரும் அதன் தயாரிப்பாளர், ஹீரோக்களிடம் போய் நஷ்ட ஈடு கேட்கவில்லையே. ஆனால் ரஜினி படத்துக்கு மட்டும் ஏன் கேட்கிறார்கள்? காரணம் அவர் அன்பான மனசுக்காரர். ஆனால் இப்போது கேட்கக் காரணம் அரசியல் சதிதான்.

ஆரம்பத்தில் ஏதோ மன அழுத்தத்தில் சிங்காரவேலன் பேசுவதாக ரஜினி நினைத்தார். அவருக்கு உதவி செய்யக் கூட நினைத்தார். ஆனால் பின் வந்த நாட்களில், அவர் பேசிய விதம் அவர் நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி கன்னட படத் தயாரிப்பாளரை அழைத்து வந்து கோடிக் கணக்கில் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு போனதாக குற்றம்சாட்டினார். இதை ரஜினி சாரிடம் கூறி, அவருக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என்றேன். அவரும் என் முடிவுக்கே விட்டுவிட்டார்.

படத்தை சீர்குலைத்த சிங்காரவேலன்

ஒப்பந்தப்படி பணத்தைத் திரும்பக் கேட்க சிங்கார வேலனுக்கு உரிமையில்லை. பொதுவாக குடும்பமாக படம் பார்க்க வருபவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில்தான் தியேட்டர்களுக்கு வருவார்கள். ஆனால் அதைக் கெடுத்து நாசமாக்கியவர் இந்த சிங்கார வேலன்தான்.

English summary
Rockline Venkatesh, producer of Lingaa says that Rajinikanth should enter politics one hundred percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X