For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமலஹாசன் புத்திசாலி...அவர் அரசியலுக்கு வரட்டும் ... ராம. கோபாலன் முழு ஆதரவு

நடிகர் கமலஹாசன் புத்திசாலி, அவர் அரசியலுக்கு வரட்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

நெல்லை: நடிகர் கமலஹாசன் புத்திசாலி, அவர் அரசியலுக்கு வரட்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வள்ளியூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசியல் சாசனத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அதனை நடைமுறைப்படுத்த யாருக்கும் தைரியம் வர வில்லை.

முதன்முதலாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா, அவரது மாநிலத்தில் நடை முறைப்படுத்தினார். பின்னர் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பு இந்தத் திட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் ஆகும்.

 ரஜினி வரட்டும்

ரஜினி வரட்டும்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாகச் சொன்னால் அதன் பிறகு நான் அதுகுறித்து கருத்து சொல்லுகிறேன்.

 கமல்ஹாசன் அரசிலுக்கு வரவேண்டும்

கமல்ஹாசன் அரசிலுக்கு வரவேண்டும்

கமல்ஹாசன் அரசியலுக்கு வரலாம். வேறு யாரும் வரக்கூடாது. அவ்வளவு புத்திசாலி அவர். மகாபாரதத்தை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இங்குதான்.

 பிளவு இல்லை

பிளவு இல்லை

இந்து அமைப்புகள் பிரிந்து கிடக்கவில்லை. பிரிந்தது போன்று சில ஒரு மாயையை உருவாக்கி பிளவுபடுத்தி வருகிறார்கள்.

 நாங்கதான் ஜனாதிபதி வேட்பாளர்

நாங்கதான் ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். சொல்பவர்தான் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. ஆமாம் நாங்கள்தான் முழு மெஜாரிட்டியில் உள்ளோம். அதனால் நாங்கள் தான் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவோம்.

இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.

English summary
Hindu munnani Rama. Gobalan said to press, Actor kamal haasan should come to politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X