For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் மானம் இப்படியா கப்பலேற வேண்டும்! சசிகலாவை பார்க்கச்சென்ற அமைச்சர்கள் குறித்து ராமதாஸ்

தமிழக அமைச்சர்கள் சசிகலாவை பெங்களூரு சிறைக்கு பார்க்கச்சென்றது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை சந்திக்க சென்ற தமிழக அமைச்சர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் மானம் இப்படியா கப்பலேற வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தரப்பு ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

Ramadoss twitter on ministers visit to Bengaluru prison

இதைத்தொடர்நது தமிழக மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவர் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்த நேற்று பெங்களூரு சிறைக்கு சென்றனர். ஆனால் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டும், சிறை அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை.

தண்டனை கைதியை வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறை காரணமாக அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிறையில் குற்றவாளியை சந்திக்க சென்ற அமைச்சர்கள் திருப்பியனுப்பப்பட்ட தகவல் தீயாக பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தின் மானம் இப்படியா கப்பலேற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss says in twitter about ministers visit to Bengaluru to see Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X