For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசை வெளியீடு.. சிபிஎஸ்இ மாணவருக்கு முதலிடம்!

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு புதிய சட்ட வரைவை இயற்றியது. இதை மத்திய அரசிடமும் சமர்ப்பித்தது. இதனால் நிச்சயம் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்ற மாணவர்கள் நம்பினர்.

அதேசமயம் தமிழக அரசின் சட்ட வரைவை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

உச்சநீதிமன்றம் அதிரடி

உச்சநீதிமன்றம் அதிரடி

அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

முதல் 5 இடங்கள்

முதல் 5 இடங்கள்

அதன்படி நீட் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 31,692 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் 20 இடங்களில் முதலிடத்தை சிபிஎஸ்இ மாணவர் பிடித்துள்ளார். 2 மற்றும் 3-ஆவது இடங்களை மாநில பிரிவில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் விவரம்

மாணவர்கள் விவரம்

656 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை ஓசூர் மாணவர் சந்தோஷும், இரண்டாவது இடத்தை கோவை மாணவர் முகேஷ் கண்ணாவும் (655), மூன்றாவது இடத்தை திருச்சி மாணவர் சையதும் (651), 4 இடத்தை சென்னை ஐஸ்வர்யாவும், 5-ஆவது இடத்தை சென்னை ஜீவாவும் பிடித்துள்ளனர். இவர்களில் முகேஷும், சையத்தும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களாவர்.

நாளை கலந்தாய்வு

நாளை கலந்தாய்வு

மாநில பாடப்பிரிவில் படித்த வேலூர் மாவட்டம் தினேஷ் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளார். நாளை முதல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2445 இடங்கள்

2445 இடங்கள்

விடுமுறை தினமான விநாயகர் சதுர்த்தி அன்றும் கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்துக்கான 3534 மருத்துவ இடங்களில் 2445 இடங்கள் அரசு கல்லூரிகளுக்கும், 860 இடங்கள் சுயநிதி கல்லூரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

English summary
TN government has released the rankings for medical admission counselling on the basis of Neet today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X