For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகாகோ மியூசியத்தில் முருகன்... ஆறுமுகங்களுடன்!

Google Oneindia Tamil News

சென்னை: கோவில்களில் விதம் விதமான முருகன் சிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சிகாகோவில் உள்ள கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஆறுமுகங்களுடன் கூடிய அரிய வகை முருகன் சிலையை வைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான முருகன் சிலையை எங்குமே காண முடியாது என்கிறார்கள். மிகவும் அரிய வகை சிலையான இதை சிகாகோ அருங்காட்சியகத்தில் அனைவரும் காணும் வகையில் பிரமாண்டமாக வைத்துள்ளனர்.

தமிழ்க்கடவுள் என்று கூறப்படும் இந்த முருகன் சிலை, கார்த்திகேயன் என்ற பெயருடன் சிகாகோ அருங்காட்சியகத்தில் அழகாக அமர்ந்திருக்கிறது.

Rare Muruga idol adorns Chicago museum

கிரானைட் சிலை

முழுவதும் கிரானைட்டால் செய்யப்பட்ட சிலையாகும் இது. ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டது இது.

மயில் மீது அமர்ந்த அழகா..

மயில் மீது அழகுற அமர்ந்திருக்கும் முருகனைப் பார்க்கவே அழகாக இருக்கிறது.

அறிவுக் கடவுள்

அறிவுக் கடவுள் என்றும் போற்றப்படும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த முருகன் சிலையை, சில்வியன் வைலர் என்பவர் பெற்று சிகாகோ அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

1962ல் வந்த சிலை

கடந்த 1962ம் ஆண்டே இந்த சிலையை சில்வியன் அன்பளிப்பாக கொடுத்து விட்டாராம்.

ஆறு கோணத்தில்

முருகனின் ஆறு முகங்களும் ஆறு கோணத்தில் காட்சி தருகிறது. மிகவும் எழில் வாய்ந்ததாக இந்த சிற்பத்தை வடித்துள்ளனர்.

English summary
A rare Murugan idol has adorned Chicago museum. The idol was found in Andhra and donated to the museum by an American in the year 1962.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X