For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓவியா, பிந்துவை நாம் பார்த்துகொண்டிருக்கும்போது ஒவ்வொரு சலுகைகளாக பறிபோகிறது! கொதிக்கும் மக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உணவு பாதுகாப்பு சட்டத்தை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் அவசரமாக ஏற்ற தமிழக அரசு, அந்த சட்டத்தை ஏற்றது குறித்து ஜூலை 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் ஊடகங்களுக்கு இன்று கிடைத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்தாலும்கூட ரேஷன் பொருட்கள் வழக்கம்போல வழங்கப்படும். இதற்கான நிபந்தனைகள் எதுவும் தமிழக அரசை கட்டுப்படுத்தாது என கூறினார். ஆனால் தமிழக அரசு ஏற்கனவே நீட், நெடுவாசல் என பல விஷயங்களில் இப்படித்தான் வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாததை பார்த்த மக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டும் ஆதங்கம் இதோ:

இதையேத்தான் அப்போவும் சொன்னீங்க

"இப்படி தான் NEET க்கும் கெத்தா சொன்னீங்க... அட போங்க சார்..." என்கிறார் இந்த நெட்டிசன்.

ஏசி இருப்போருக்கு ரேஷன் இல்லையாம்

ஸ்மார்ட்போன் இருக்குறவங்கள மட்டும் ஏன் விட்டுவெச்சீங்க அவுங்க ரேசன் கார்டையும் கேன்சல் பண்ணிடுங்க,பிக்பாஸ் பாத்துட்டு டிவிட்டாடா போடுறீங்க

எதுவும் இருக்காது, செல்போன் இருக்கும்

வரி ஏத்தியாச்சு; கேஸ் மானியம் ரத்து; ரேஷன் கிடையாது; ஆனா 100 கோடி பேருக்கு இலவசமா 4ஜி போன் கிடைக்கும்.
#digitalindia டாவ்💪💪💪

பிக்பாஸில் மக்கள் கவனம்

நாம் ஓவியாவையும், பிந்து மாதவியையும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது அரசு ஒவ்வொரு சலுகைகளாக உருவிக்கொண்டுள்ளது #ரேஷன்கார்டு

நெடுவாசல் வாக்குறுதி

அமைச்சர் விளக்கம் கொடுத்தாலும் அவநம்பிக்கையே வருகிறது. நெடுவாசல் வாக்குறுதியை காற்றில் விட்டவர்கள்தானே இவர்கள். #ரேஷன்

ஆதரவு ஏன்?

சிலிண்டருக்கு மானியம் இல்ல. ரேஷன் கார்டு இல்ல. நீட் விலக்கு இல்ல. இச்சூழலில் குடியரசு தேர்தல்களில் பாஜகவை ஆதரிக்கிறது அதிமுக #TNneverforget

இப்படி ஒரு குழப்பம்

ரேஷன் அட்டையே கிடையாதா இல்லை அதை பயன்படுத்தி மலிவு விலைக்கடையில் வாங்க முடியாதா? ஏன் என்றால் ரேஷன் அட்டை அடையாள அட்டையாகவும் விளங்குகிறதே!

வேறு அடையாளம் இல்லையா

இனி ஆதார்தான் தமிழனின் ஒரே அடையாளம் போல.

நிலைமை இப்படியாகிவிட்டதே

மாசம் 10000 சம்பாரிச்சா ரேஷன் இல்லையாமா? 😱 லேடிக்கும்,மோடிக்கும் மாத்தி மாத்தி ஓட்டு குத்துனவனுகளுக்கு இதல்லாம் தேவைதான்.

English summary
Netizens troll Tamilndu Government and express their anger as the government is trying to cancel ration cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X