For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிந்து போன கேபி. சகாப்தம்.. கண்ணீர்க் கடலில் பிரபலங்கள்.. டிவிட்டரில் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் டுவிட்டர் வாயிலாகவும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 84. அன்னாரது மறைவுக்கு கலைஞர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சில திரையுலகப் பிரபலங்கள் தங்களது மனவேதனையை டுவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையையே மாற்றியவர்...

வாழ்க்கையையே மாற்றியவர்...

பிரகாஷ்ராஜ்: என் வாழ்க்கையையே மாற்றியதற்கு நன்றி கே.பி. சார்... எனக்கு கற்றுத் தந்த மற்றும் கற்காத தருணங்களுக்கும். உங்களின் இழப்பு ஏற்படுத்திய வலியினால் நான் கதறி அழுது கொண்டிருக்கிறேன். உங்களை இழந்து வாடுகிறேன்...

சிறந்த கதை சொல்லி...

சிறந்த கதை சொல்லி...

மதூர் பந்தர்கர்: பாலசந்தர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி. ஏக் துஜே கே லியே, சாரா சி சிந்தகி ஆகிய படங்கள் அவரை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

கருத்தில் உறுதி...

கருத்தில் உறுதி...

ராம் கோபால் வர்மா: பாலசந்தரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாலசந்தர் கடைசி வரை தன்னுடைய கருத்தில் உறுதியாக நின்றவர். எப்போதுமே அவர் தான் சிறந்த இயக்குனர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

ராம் சரண்: இயக்குனர் சிகரம் பாலசந்தரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

பேரிழப்பு...

பேரிழப்பு...

லஷ்மி மஞ்சு: பாலசந்தர் சாரின் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் சினிமாவை மாற்றியமைத்தவர். நீங்கள் ஒரு சிறந்தவர். பாலசந்தரின் மரணம், சினிமா உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

ஆத்மா சாந்தியடையட்டும்...

ஆத்மா சாந்தியடையட்டும்...

பிரியாமணி: எனக்கு பாலசந்தரை பார்க்கும் வாய்ப்பு நிறையமுறை கிடைத்திருக்கிறது அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் மரணம் நிச்சயம் பேரிழப்பு

படைப்புகள் மூலம் வாழ்வீர்கள்...

படைப்புகள் மூலம் வாழ்வீர்கள்...

வரலட்சுமி : பாலசந்தரின் இழப்பில் இருந்து மீழும் வலிமையை அவருடைய குடும்பம் பெறட்டும். பாலசந்தரின் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் படைப்புகளின் மூலம் நீங்கள் எப்போதும் வாழ்வீர்கள்.

ஆராதிக்கப் படுபவர்...

ஆராதிக்கப் படுபவர்...

சுந்தீப் கிஷன்: 2014 ஆண்டு விரைவாக முடிய வேண்டும். பாலசந்தரின் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் எப்போதும் எல்லோராலும் விரும்பப்படுபவர், ஆராதிக்கப்படுபவர்....

உண்மையான மேதை...

உண்மையான மேதை...

சிரியா ரெட்டி: பாலசந்தர் ஒரு உண்மையான மேதை. அவர் இறந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

English summary
Celebrities took to Twitter to mourn the death of K Balachander, legendary filmmaker of the Tamil Industry, who died of a cardiac arrest on Tuesday. He was 84.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X