For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்"

Google Oneindia Tamil News

சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள்.

உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது.

கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...

Rocking whatsapp message on World water day

2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை..

இன்றைய முக்கிய செய்திகள்

ஈரோடு அருகே வீட்டில் பூட்டி வைத்திருந்த மூன்று குடம் தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

மூன்று வயது குழந்தையை lkgயில் சேர்ந்த இரண்டு குடம் தண்ணீர் நன்கொடையாக கேட்ட பள்ளி உரிமையாளர் கைது...

கணவனுக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த 4 குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம். கணவன் 4 குடம் தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல் புகார்...

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால் ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர் தருவதாக தண்ணீர் மோசடி கும்பல் கைவரிசை...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடையில் 3 குடம் தண்ணீர் தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி.. இதற்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் மூலம் கடத்தி சென்ற 20,000 லிட்டர் தண்ணீரை விண்வெளி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

உலக தண்ணீர் வங்கியில் இருந்து இந்தியா 50 கோடி லிட்டர் தண்ணீர் கடன் வாங்கியது

பொது மக்கள் அனைவரும் மாதம் ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும். இரண்டு சொம்பு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது. மீறினால் இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல் செய்ய்படும்.

உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில் இந்தியா தண்ணீர் கோப்பையை வென்றது ...

இன்றைய தண்ணீர் நிலவரம்.. கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000 ரூபாய்க்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000
ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன...

மரம்...வளர்ப்போம்.. வருகாலத்தை...வளமாக்குவோம்...

இது சிரிக்க அல்ல சிந்திக்க மட்டுமே.

English summary
A message on World water day is rocking in Whatsapp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X