சசிகலா சிறை விதிமீறல்.. அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு, ஆளுநர் கிரண்பேடி ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இவருக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

Roopa gets Puducherry governor Kiran Bedi support

இதுகுறித்த செய்தி அடிப்படையில், புதுச்சேரி ஆளுநரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண்பேடி, டிவிட்டரில் ரூபாவை வாழ்த்தியுள்ளார்.

இதற்கு டிவிட்டரிலேயே நன்றி தெரிவித்துள்ள ரூபா, நூறு யானை பலம் பெற்றதை போல உணர்வதாக கிரண்பேடியின் ஆதரவு குறித்து நெகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு டிவிட்டரிலேயே பதிலளித்துள்ள கிரண்பேடி, நீங்கள் வலுவாக போய்க்கொண்டிருங்கள். உங்களை எங்கே பணிக்கு அமர்த்தினாலும் அப்படியே இருங்கள். இளம் சமுதாயத்திற்கு நீங்கள் முன்மாதிரி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உங்கள், ஆசிக்கு, மீண்டும் நன்றி, என கூறியுள்ளார் ரூபா.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Karnataka IPS officer Roopa gets Puducherry governor KiranBedi support in Twitter.
Please Wait while comments are loading...