தாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

தாமிரபரணி நம்பியாறு இணைப்பிற்கென தமிழக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் தாமிரபரணி நம்பியாறு இணைப்பிற்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

2017-18ம் ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதில் ஆறுகள் இணைப்பு மற்றும் புனரமைப்பு குறித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

Rs. 100 Crore for Thamirabarani Nambiar link project

அதில் ஒன்றாக, அணைகள் மேம்பாடு மற்றும் புனரமைப்பிற்கென 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் அறிவித்தார். மேலும், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பிற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

English summary
Rs. 100 Crore allocated for Thamirabarani Nambiar link project in Tamil Nadu budget 2017-18.
Please Wait while comments are loading...