For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வரானதும் ரூ.330 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தவர் எம்ஜிஆர்.. எடப்பாடியார் புகழாரம்

முதல்வரானதும் ரூ.330 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தவர் எம்ஜிஆர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவாரூர்: விவசாயிகளுக்காக சினிமாவில் பாடல் பாடியவர் எம்ஜிஆர் மட்டுமே என்றும் முதல்வரானதும் ரூ.330 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்தவரும் அவரே என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.

எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஒரு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட சிறப்புகளை குறிப்பிட்டு புகழாரம் சூட்டிய அவர் தனது உரையை தொடர்ந்தார்.

 Rs. 330 crore farm debt waived off by MGR, says Edappadi Palanisamy

அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளுக்காக சினிமாவில் பாடல் பாடியவர் எம்ஜிஆர் மட்டுமே. முதல்வரானதும் 330 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவரும் அவரே.

நாட்டின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்கள் விவசாயிகள் என்ற நம்பிக்கையுள்ளவர். பள்ளி காலத்தில் மாணவர்களிடம் பணம் வசூலித்த மாணவர் தலைவன் அந்த பணத்தில் தின்பண்டம் சாப்பிட்டதால் அறைந்தவர் எம்ஜிஆர்.

தவறுகளை தட்டி கேட்கும் குணம் சிறு வயதில் இருந்தே எம்ஜிஆர் ரத்தத்தில் ஊறியது. பிற்காலத்திலும் தவறை தட்டி கேட்டதால்தான் தான் சார்ந்த கட்சி அவரை நீக்க காரணமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

English summary
MGR Birth centenary function going in Tiruvarur. CM Edappadi Palanisamy praises MGR as he had interests in farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X