சென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ744 கோடி ஒதுக்கீடு #TNBudget

சென்னையில் உள்ள புறவழிச் சாலைகளை அமைத்தல், மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.744 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள புறவழிச் சாலைகளை அமைத்தல், மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.744 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதற்கு பின்னர் 2017- 2018 -ஆம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.

Rs. 4,781 crores for Social Welfare Department

அவை தொடங்கியதும் திருக்குறளை வாசித்து நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை புறநகர் பகுதிகளில் சாலைகளை அமைத்தல், புனரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.744 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய பாலங்களை கட்டுவதற்கும், சாலைகளை அகலப்படுத்துவதற்கும் ரூ3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

English summary
Rs.3,100 Crores has been allocated for New bridges and widening the roads.
Please Wait while comments are loading...