தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சிக்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் கலாசார பாரம்பரிய அருங்காட்சியம் அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தது. பட்ஜெட் உரையை நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார்.

Rs.48 crore announced for Tamil language development

அப்போது தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார். தமிழ் வளர்ச்சிக்காக நடப்பு நிதியாண்டில் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

மேலும் தமிழகத்தில் தமிழர் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில், தமிழர் கலாசார பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஜெயகுமார் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

English summary
Rs.48 crore announced for Tamil language development in the budget of Tamil Nadu assembly.
Please Wait while comments are loading...