அரசை தலைகுனிய வைத்த விஜயபாஸ்கரை இபிஎஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Sack Minister Vijayabhaskar: Urges GK Vasan

வருமான வரித்துறையின் மூலம் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

ஒரு அமைச்சருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியிருப்பது என்பது தமிழக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சூழலில் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இன்னும் நீடிப்பது நல்ல அரசுக்கு ஏற்புடையது அல்ல.

விஜயபாஸ்கர் தான் வகிக்கும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Poll defeat: GK Vasan discusses with TMC functionaries

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
TMC chief GK Vasan said in a statement that TN health minister Vijayabhaskar should be sacked from his post.
Please Wait while comments are loading...