ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு... சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வவிநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார்.

Saidapet court dismissed Jayalalithas death case

அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முத‌ல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்க மறுத்ததை அடுத்து அ‌வர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

Jayalalitha also stayed in Parappana Agrahara prison like where Sasikala stays-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Saidapet court dismissed Jayalalithas death case. Lawyer Selva vinayagam filed apetition in the court to enquire Jayalalitha's death.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்