For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடிக்காவிட்டால் அமைதியாக இருங்கள் - ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு சமுத்திரகனி கோரிக்கை

இளைஞர்களின் போராட்டத்தை சீர்குலைக்க பலர் ஊடுருவி இருக்கிறார்கள் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என ஒரு புரட்சியே நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகளோ, சினிமா பிரபலங்களோ பங்கேற்க வேண்டாம் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் ஜல்லிக்கட்டுக்காக பாடல்களை இசையமைப்பாளர்கள் ஹிப்ஹாப் ஆதி, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இசையமைத்தனர். போராங்களிலும் பங்கேற்றனர்.

Samuthirakani asks Hiphop Tamizha to keep quiet

நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி, லாரன்ஸ் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே இந்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறினார். போராட்டம் திசை மாறுவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஹிப்ஹாப் தமிழாவிற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிர்க்கு பேட்டியளித்த இயக்குநர் சமத்திரகனி, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதியின் கருத்து குழப்பம் அளிப்பதாக கூறியுள்ளார்.

போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் ஊடுருவியிருக்கிறார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் அதனை நாம் தான் அதை முறியடிக்க வேண்டும். போராட்டத்தில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் அமைதியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆதி போட்ட பாடல்தான் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனவே திடீரென இப்போது கூறியுள்ளதால் போராட்ட குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால்தான் முன்பே சினிமா பிரபலங்களையோ, அரசியல்வாதிகளையோ யாரும் வரவேண்டாம் என்று கூறினர். நான், ஆதி, லாரன்ஸ் ஆகியோர் போராட்டகளத்திற்கு சென்ற போது எங்களை அவர்களில் ஒருவராகத்தான் பார்க்கின்றனர். இப்போது ஏன் ஆதி இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.

மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். அதனை நாம்தான் முறியடிக்க வேண்டும். 4 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். போராட்டக்காரர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள் என்றும் சமுத்திரகனி கூறியுள்ளார்.

English summary
Director Samuthirakani has urged Hiphop Tamizha to keep calm on the Jallikattu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X