For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுச்செயலாளர் பதவி.. தேர்தல் ஆணைய கெடு நாளையுடன் முடிகிறது.. சசிகலா பதில் எப்போது?

ஓ.பி.எஸ் தரப்பு கொடுத்த, இந்த மனு மீது உரிய பதிலை 28ம் தேதியான நாளைக்குள் அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்த தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு, நாளைக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதிமுக சட்டத்திட்டப்படி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்கவும் முடியாது என்பதே எம்.ஜி.ஆர்., அதிமுகவை உருவாக்கியபோது ஏற்படுத்தப்பட்ட விதிமுறை.

Sasikala has to file reply for the election commission notice by tomorrow

ஓ.பி.எஸ் தரப்பு கொடுத்த, இந்த மனு மீது உரிய பதிலை 28ம் தேதியான நாளைக்குள் அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து சசிகலாவை பெங்களூர் சிறையில் வைத்து, டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆலோசித்தார். தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது..

English summary
AIADMK genral secratary Sasikala has to file reply for the election commission notice about her appointment in the party by tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X